எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26 மற்றும் 27 தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வங்கித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக, பல்வேறு பொதுத் துறை வங்கிகளை இணைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி அறிவித்தார். மத்திய அரசின் இந்த இணைப்பு நடவடிக்கைக்குப் பிறகு 12 பொதுத் துறை வங்கிகள் மட்டுமே இருக்கும். பொதுத்துறை வங்கிகளை சர்வதேச தரத்துக்கு மாற்றும் முயற்சியாகவும், வங்கிகளின் கடன் வழங்கும் திறனை அதிகப்படுத்தவும், இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டதற்கு வங்கி அதிகாரிகள் சங்கம் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.
இந்த நிலையில், வருகிற 26 மற்றும் 27-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வங்கி அலுவலர் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அலுவலர் சங்கம், இந்திய தேசிய வங்கி அலுவலர் மற்றும் வங்கி அதிகாரிகளின் தேசிய அமைப்பு இந்த போராட்டத்தை அறிவித்துள்ளன. பொதுத்துறை வங்கிகளை இணைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 26 (வியாழன்) மற்றும் 27-ம் (வெள்ளி) தேதிகளில், வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 28 மற்றும் 29-ம் தேதி முறையே 4-வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகள் செயல்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நாட்களில் வங்கி பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும். மேலும் ஏ.டி.எம்.களில் பணப்பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உருவாகும். அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு வருகிற அக்டோபர் 22-ம் தேதி வங்கிகள் இணைப்புக்கு எதிராக வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று தெரிவித்துள்ளது. மத்திய அரசு செவி சாய்க்காத பட்சத்தில் நவம்பர் மாதத்தில் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று வங்கி அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


