முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக மாபெறும் வெற்றிபெறும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2019      விருதுநகர்
Image Unavailable

சாத்தூர்,  நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக மாபெறும் வெற்றிபெறும் என்று சாத்தூர் பொதுக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
சாத்தூரில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சாத்தூர் எம்எல்ஏ எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசும்போது, அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடும் தகுதி அதிமுகவிற்கு மட்டுமே உண்டு. விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளையும் அதிமுக வேட்பாளர்கள்தான் கைப்பாற்றுவார்கள். தற்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு இடைத்தேர்தல்களிலும் அதிமுக மாபெறும் வெற்றிபெறும். நாங்குநேரி இடைத்தேர்தலில் தோல்வி பயம் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணா திமுகவிற்கு திமுகதான் எதிரி. மற்றதெல்லாம் உறுதிதான். களத்தில் மற்ற கட்சிகளை கணக்கி்ல் கொள்ள தேவையில்லை. நாங்குநேரியில் வேட்பாளர்களை காங்கிரஸ் தேடிக்கொண்டு இருக்கின்றது. அநேகமாக டெல்லியில் இருந்துதான் யாரையாவது நிறுத்துவார்கள்.கல்விக்கடன் ரத்து, விவசாய கடன் ரத்து போன்று பொய்யான வாக்குறுதிகளை நம்பி எம்பி தேர்தலில் திமுகவிற்கு வாக்காளர்கள் வாக்களித்தனர். தற்போதுதிமுகவின் ஏமாற்று நாடகம் தெரிந்துவிட்டது. அதனால்தான் வேலூர் எம்பி தேர்தலில் வெறும் 8ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். 2ஏக்கா் நிலம் தறுவோம் என்று கூறியது போல ஒவ்வொறு தேர்தலிலும் வாக்காளர்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று விடுவது திமுகவிற்கு வாடிக்கையாக உள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. சாத்தூர் இடைத்தேர்தலில் பட்டாசு ஆலைகளை மோடி மூடிவிடுவார் என்று பொய்யான பிரச்சாரத்தை திமுக கையில் எடுத்தது. நாட்டில் யாரும் நிம்மதியாக இருப்பது திமுகவிற்கு பிடிக்காது. எ்பபடியாவது சண்டை இழுத்து விட வேண்டும். ஜாதி, மத கலவரத்தை தூண்டி விட வேண்டும். அதில் அரசியல் செய்ய வேண்டும் என்ற வகையில்தான் திமுக செயல்பட்டு வருகின்றது. திமுகவின் கீழ்தரமான அரசியல் அனைத்து சமுதாய மக்களும் நினைத்து பார்க்க வேண்டும். அவர்களின் ஜாதி, மத அரசியலுக்கு யாரும் அடிபணியக்கூடாது. எல்லோறும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற நிலையில் திமுக எப்போது் செயல்பட்டது கிடையாது. அதற்கான முயற்சிகளும் அவர்கள் செய்து பழக்கம் கிடையாது. திட்டமிட்டு ஏமாற்றும் கூட்டமாக திமுக கூட்டம் செயல்பட்டு வருகின்றது என்று பேசினார். கூட்டத்தில் திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா, முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம்.,  முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், ஜெ.பேரவை மாநில இணைச்செயலாளர் சேதுராமானுஜம்,  நகர செயலாளர் வாசன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை, எதிர்கோட்டை மணிகண்டன், ராமராஜ்பாண்டியன், வேல்முருகன், மயில்சாமி, புதுப்பட்டி கருப்பசாமி, சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினா் வேலாயுதம், மாணவரணி மாவட்ட செயலாளர் நல்லதம்பி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் மாரியப்பன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி பொருளாளர் கிருஷ்ணன், முன்னாள் நகர்மன்ற தலைவர் டெய்சிராணி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் முனீஸ்வரன், நகர எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் இளங்கோவன்  உட்பட கட்சியின் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து