Idhayam Matrimony

ஜாமீன் கிடைத்தால் வெளிநாடு செல்லமாட்டேன் டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் உறுதி

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : நான் பொறுப்புமிக்க குடிமகன், ஜாமீன் கிடைத்தால் வெளிநாடு செல்ல மாட்டேன் என்று டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் விளக்க மனு தாக்கல் செய்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கடந்த மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் அக்டோபர் 3-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 11-ந்தேதி மனு தாக்கல் செய்தார். “அரசியல் பழிவாங்கும் நோக்கில் தன் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இதனால் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தது.

இது தொடர்பாக சி.பி.ஐ. பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதற்கிடையே ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்றை கடந்த 20-ந்தேதி தாக்கல் செய்தது.  ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி சுரேஷ் கைட் முன்னிலையில் நேற்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. 

இந்த நிலையில் ஜாமீனுக்கு சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து ப.சிதம்பரம் விளக்க மனு ஒன்றை ஐகோர்ட்டில்  தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நான் எம்.பி.யாக இருக்கிறேன். பொறுப்புமிக்க குடிமகன். ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு செல்ல மாட்டேன். வெளிநாடு தப்பி விடுவேன் என்று சி.பி.ஐ. சொல்வது முற்றிலும் தவறானது. என் மீதான குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து