முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் மீண்டும் 370-வது பிரிவை கொண்டு வர எதிர்க்கட்சிகளுக்கு துணிச்சல் உண்டா? பிரச்சாரத்தில் பிரதமர் மோடி சவால்

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் 370 பிரிவையும், 35 ஏ பிரிவையும் கொண்டு வருவோம் என்று தேர்தல் வாக்குறுதியாக அளிக்க எதிர்க்கட்சிகளுக்கு துணிச்சல் இருக்கிறதா என்று பிரதமர் மோடி சவால் விடுத்தார்.

மகராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் வரும் 21-ம் தேதி தேர்தலும் 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வும்,சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. ஜால்கான் நகரில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான 370-வது பிரிவு, 35 -ஏ பிரிவு ஆகியவற்றை நீக்கியதற்காக எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் விடுவதை முதலில் நிறுத்த வேண்டும். இந்தியாவில் உள்ள முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இருக்கிறார்கள். ஏனென்றால், மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முத்தலாக்கை நீக்கி நல்லது செய்திருக்கிறது. இந்த சத்ரபதி சிவாஜியின் புனிதமான மண்ணில் இருந்து நான் கேட்கிறேன். சவால் விடுக்கிறேன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசியலமைப்பு 370-வது பிரிவு, 35 ஏ நீக்கத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்பதை தெளிவாகக் கூறுங்கள். மத்திய அரசின் முடிவை ஆதரிக்கிறீர்களா? அல்லது எதிர்க்கிறீர்களா? என்பதை கூறுங்கள்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசியஜனநாயக் கூட்டணி அரசு மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்துகிறது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீரில் 370 பிரிவை நீக்கி எப்போதும் யாரும் செய்யாத முடிவை எடுத்திருக்கிறோம். ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்கும், தலித்துகளுக்கும் உரிமை மறுக்கப்பட்டு இருந்தது. 370, 35ஏ இருந்த போது அங்கு தீவிரவாதம்தான் உச்சபட்ச ஆட்சியாக இருந்தது. நான் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுக்கிறேன். உங்களுக்கு துணிச்சல் இருந்தால், வரும் 21-ம் தேதி நடக்கும் மகராஷ்டிரா தேர்தலில், மீண்டும் காஷ்மீரில் 370-வது பிரிவு, 35ஏ பிரிவை கொண்டு வருவோம் என்று தேர்தல் வாக்குறுதியாக அளிக்க துணிச்சல் இருக்கிறதா? மக்கள் ஒருபோதும் 370-வது பிரிவை கொண்டுவர அனுமதிக்க மாட்டார்கள். அதே போல முத்தலாக்கையும் மீண்டும் கொண்டு வர முடியுமா?

40 ஆண்டுகளாக காஷ்மீரில் இயல்பு வாழ்க்கையை கொண்டு வராத நிலையில், நாங்கள் இன்னும் 4 மாதங்களில் இயல்பு நிலையை கொண்டு வருவோம். அதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. பா.ஜ.க. அரசின் வார்த்தையும், செயலும் வேறு வேறாக இருக்காது. இந்த உலகம் இந்தியாவைப் பார்த்து வருகிறது. புதிய இந்தியாவின் உத்வேகத்தை உணர்ந்து வருகிறது. எதிர்க்கட்சியினர் அனைவரும் அண்டைநாட்டுக்கு ஆதரவாகத்தானே கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370-வது பிரிவை திரும்பப் பெறுவது சாத்தியமில்லை என்று நினைத்தார்கள். ஆனால் யாரும் செய்யாத செயலை அரசு செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மக்களும், லடாக் மக்களும் தேசிய நீரோட்டத்தில் இணைய இருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவை எங்களுக்கு சிறிய துண்டு நிலப்பகுதி அல்ல. இந்தியாவின் மணிமகுடம். கடந்த 5ஆண்டுகளாக பா.ஜ.க. அரசு செய்த பணிகளை பார்த்து எதிர்க்கட்சி்யினர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். மகராஷ்டிராவில், சிவசேனாவும், பா.ஜ.க.வும் இணைந்து தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெறும். தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் மீண்டும் வலிமையான அரசு அமையும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து