Idhayam Matrimony

உலக குத்துச்சண்டை போட்டி: வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்தியாவின் மஞ்சு ராணி

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

மாஸ்கோ : ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

48 கிலோ இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் எகாட்டரினாவிடம் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் மஞ்சு தோல்வியடைந்தார். தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா சார்பில் மஞ்சு ராணி மட்டுமே தகுதி பெற்ற நிலையில் தங்க பதக்கம் பெரும் வாய்ப்பை இழந்தார். 11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவில் நடந்து வருகிறது.

இதன் 48 கிலோ கிராம் எடைப்பிரிவில் இந்தியாவின் மஞ்சு ராணி பங்கேற்றார். இதன் அரையிதியில் தாய்லாந்தின் சுதாமத் ரக்சாத்தை வீழ்த்திய மஞ்சு ராணி பைனலுக்கு தகுதி பெற்றார். இதையடுத்து இவர் தங்கப்பதக்கம் வென்று அசத்துவார் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் பைனலில் மஞ்சு ராணி ரஷ்யாவின் ஏக்தாரினாவை எதிர்கொண்டார். பரபரப்பான துவங்கிய பைனலின் முதல் சுற்றில் ரஷ்ய வீராங்கனையிடம் ராணி அதிக பஞ்ச் வாங்கினார்.

தொடர்ந்து இரண்டாவது சுற்றிலும் ராணி சொதப்பலாக ஆடினார். இறுதியில், இந்தியாவின் மஞ்சு ராணி ரஷ்யாவின் ஏக்தாரினாவிடம் 1-4 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை சந்தித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்நிலையில் மேரி கோமின் 18 ஆண்டு சாதனையை தகர்க்கும் மஞ்சு ராணியின் கனவு கலைந்தது. ஆனால் மேரி கோமிற்கு பிறகு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை மஞ்சு பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து