ஆயிரம் விளக்கு மசூதி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை: துணை முதல்வர் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2019      தமிழகம்
O Panneer Selvam 2019 03 03

சென்னை : ஆயிரம் விளக்கு மசூதி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்ததற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய ஷியா -சுன்னி ஒற்றுமை இயக்கத்தின் சார்பில் ,ஹுசைன் ஜிந்த ஹை (இமாம் ஹுசைன் உயிருடன் இருக்கிறார் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் சென்னை ஆயிரம் விளக்கு மசூதியில் நடைபெற்றது.இஸ்லாம் மார்க்கத்தின் இறுதித் தூதுவரான நபிகள் நாயகத்தின் இரண்டாவது பேரனான இமாம் ஹுசைனின் தியாகத்தை நினைவுக் கூர்ந்து புகழஞ்சலி செலுத்தும் இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும்கூட பலரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு அ.தி.மு.க.வும், அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சியும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆற்றியுள்ள பலவிதமான நலத்திட்டங்களை பட்டியலிட்டார். எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா ஆகியோர் முஸ்லிம் சமுதாயத்தின் நலனில் அக்கறையுடன் இருந்ததையும், முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்திய திட்டங்களையும் நினைவுக் கூர்ந்தார். மறைந்த முதலமைச்சர்களான எம்.ஜிஆர். ஜெயலலிதா காட்டிய வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு முஸ்லிம்களின் நலனிலும், பாதுகாப்பிலும் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், எதிரிகளாலும்,துரோகிகளாலும் பலவித துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், சூழ்ச்சிகளுக்கும் ஆளான போதிலும்இமாம் ஹுசைன் அதனை எல்லாம் நெஞ்சுரத்தோடு எதிர்க்கொண்டு, நபிகள் நாயகத்தின் ,அறவழியில், இமாம் ஹுசைன் (ரலி) செயல்ப்பட்டு, தமது வாழ்க்கையை தியாகம் செய்துள்ளதை அறிந்து அதனை நினைவுகூர்ந்து பெருமிதம் அடைவதாகவும் தெரிவித்தார். இமாம் ஹுசைனின் தியாகத்தை நினைவுகூருவதன் ஓர் அம்சமாக, சென்னை ஆயிரம் விளக்கு மசூதியின் வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய முடிவெடுத்துள்ள ஆயிரம் விளக்கு மசூதி நிர்வாகத்தினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதாகவும் இன்றைய காலத்தில் இத்தகைய செயல்பாடு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து