எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக ஒரு மாதம் அதிகமாக நீடித்து வந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் முற்றிலுமாக விலகும் எனவும் நாளை 17-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர் சந்திப்பின் போது, வரும் 17-ம் தேதி முதல் தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதிகள், ராயசீலா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் வளிமண்டலத்தில் 1.5 கிலோமீட்டர் வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக கூறப்படும் நிலையில், நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், 44 சென்டி மீட்டர் மழையை தமிழகத்திற்கு தருவது இயல்பு என கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


