எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மாகாணங்களை தாக்கிய நிலநடுக்கத்திற்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 அலகாக பதிவாகியிருந்தது. வடக்கு கோடபாட்டோ மாகாணத்தின் மகிலாலா நகரில் இருந்து தென்மேற்கில் 23 கிமீ தொலைவில் கடலுக்கடியில் 2 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் தெற்கு பகுதியில் உள்ள பல்வேறு மாகாணங்களை தாக்கியது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நீண்ட நேரம் நில அதிர்வும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்கள் சேதமடைந்தன. சில பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டது. துலுனன் நகரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது குழந்தை உயிரிழந்தது. மிலங் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் பலியானார். வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை உயிரிழந்தது. இதே போல் நிலச்சரிவில் வீடு புதைந்ததில் தாயும், குழந்தையும் உயிரிழந்தனர். நிலநடுக்கம் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


