எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதான ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் 21-ம் தேதி கைது செய்தது.
அவரை காவலில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் டெல்லி ஐகோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டன. அவரது நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இதற்கிடையே ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, ரிஸ்கேஷ்ராய் ஆகியோரை கொண்ட பெஞ்ச், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சி.பி.ஐ. பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், இந்த மனு மீதான விசாரணையை 15, 16 மற்றும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


