மணிலாவில் காந்தி சிலை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்V

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2019      உலகம்
Gandhi statue manila 2019 10 20

மணிலா : பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார். முதல் கட்டமாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  பிலிப்பைன்ஸ் அதிபரை சந்தித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து இரு நாடுகளிடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதைத் தொடர்ந்து, இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 35 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோருடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துரையாடினார். அப்போது பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்புத் துறைகளிலும், தீவிரவாதத்துக்கு எதிராகவும் இணைந்து செயல்பட ஒப்புக்கொள்ளப்பட்டது. சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்நிலையில் தலைநகர் மணிலாவில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நேற்று மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலையை திறந்து வைத்தார். பிலிப்பைன்ஸ் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு டோக்கியோ செல்ல இருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜப்பானின் புதிய மன்னரின் முடிசூட்டுவிழாவில் பங்கேற்கவுள்ளார்.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைக்கப்பட்டு உள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று காலை திறந்து வைத்தார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு மணிலாவில் காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, டோக்கியோவில் உள்ள புத்த கோவிலுக்கு செல்லும் ஜனாதிபதி அங்கு ஒரு போதி மரத்தையும் நட உள்ளார். பின்னர் தனது ஜப்பான் பயணத்தை வரும் 23-ம் தேதி முடித்துக் கொண்டு ஜனாதிபதி இந்தியா திரும்புகிறார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து