Idhayam Matrimony

3-வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் வெற்றி: தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றதுடன், தொடரையும் முழுமையாக கைப்பற்றியது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் போது 162 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்தியாவும் பாலோ-ஆன் கொடுக்க தென்ஆப்பிரிக்கா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. முகமது ஷமியின் அபார பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்காவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. 36 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இதனால் 3-வது நாள் ஆட்டத்திற்குள் தென்ஆப்பிரிக்கா ஆல்அவுட் ஆகி டெஸ்ட் போட்டி முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. லிண்டே 27 ரன்களும், டேன் பீட் 23 ரன்களும் சேர்க்க தென்ஆப்பிரிக்கா ஆல்அவுட் ஆகாமல் தப்பித்துக் கொண்டது. நேற்று முன்தின ஆட்டநேர முடிவில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டம் நேற்று காலை தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் புரூயின்(30), நிகிடி(0) இருவரும், நதீம் ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, தென் ஆப்பிரிக்க அணி 133 ரன்களில் சுருண்டது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மிகப்பெரிய வெற்றி ஆகும்.இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். உமேஷ் யாதவ், நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி உள்ளது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்திலும், புனேயில் நடந்த 2-வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து