Idhayam Matrimony

கொரோனா காலத்தில் பணியாற்றிய 668 செவிலியர்களுக்கு பணிநியமனம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2026      தமிழகம்
Ma Subramani

சென்னை, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில், கொரோனா காலத்தில் பணியாற்றிய 668 செவிலியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கி, அயலக மருத்துவ மாணவர்கள் மருத்துவப் பயிற்சிக்கான இணைய முகமை வெளியிட்டு பேசினார்.

 அதன் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலோடு, தொடர்ச்சியாக பொதுமக்கள் நலனில் அக்கறை செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா காலங்களில் பணியாற்றிய செவிலியர்கள் அனைவரும் ஒருவர் கூட பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து அவர்களுக்கு படிப்படியாக பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

கொரோனா காலத்தில் தற்காலிகமாக பணியில் சேர்ந்த செவிலியர்கள் யாருக்கும் இந்தியாவில் வேறு மாநிலங்களில் பணிநிரந்தரம் என்பதோ அல்லது அவர்களை அரசுப் பணியில் இணைத்துக் கொண்டது என்பதோ இதுவரை இல்லை. ஆனால் நமது தமிழ்நாடு முதல்-அமைச்சர் தற்காலிகமாக கொரோனா காலங்களில் பணியமர்த்தியவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்கின்ற வகையில், ஒருவர் கூட கொரோனா காலங்களில் பணியாற்றியவர்கள் விடுபட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து ஏற்கெனவே அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்களை வழங்கி, 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர்களை பணியில் அமர்த்தி கொண்டார்கள்.

அந்த வகையில்கொரோனா காலங்களில் தற்காலிகமாக பணியில் இணைந்தவர்கள் 2,814 பேர், இதில் 2,146 பேருக்கு ஏற்கெனவே மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. மீதமிருந்த 719 பேருக்கு அவர்களுக்கான ஆவணங்கள் சமர்ப்பிப்பதற்கு நிறைய குளறுபடிகள் இருந்தது, அவர்களுக்கு ஒப்பந்த பணிநியமன ஆணைகள் தர வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. 

தமிழ்நாடு முதல்வருக்கு பணிநியமன ஆணைகள் தர வேண்டும் என்று அறிவுறுத்தியதன் காரணமாக, அவர்களை தனித்தனியாக வரவழைத்து அவர்களுக்குரிய ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டடு 668 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமிருக்கும் 59 பேருக்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களும் பணிநியமன ஆணைகள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதோடு மட்டுமல்லாமல் 2014-ம் ஆண்டு தொடங்கி தற்காலிக அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களை இந்த அரசு படிப்படியாக அவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் 2014 முதல் 2021 முன்பு வரை 7 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் 1871 பேருக்கு தான் பணிநிரந்தர ஆணைகள் வழங்கப்பட்டது. ஆனால் நமது தமிழ்நாடு முதல்வர், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னது போல அதனை முழுமையாக நிறைவேற்றிடும் வகையில் 5 ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் 5,825 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர பணி ஆணைகள் பெற்றிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து