முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கும்பகோணம் நேட்டிவ் பள்ளி முன்னாள்மாணவருக்கு பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

கும்பகோணம் : உலக தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கும்பகோணம் நேட்டிவ் பள்ளியின் முன்னாள் மாணவன் ஆனந்த குணசேகரனுக்கு பாராட்டு விழா நேற்று பள்ளி விளையாட்டு மைதானத்தில் தலைமையாசிரியர் பொறுப்பு ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு உதவி தலைமையாசிரியர் இளம் பூரணன் முன்னிலை வைத்தார். இந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் உதவி தலைமையாசிரியர் ஜான் ஸ்டீபன் வரவேற்றார். உலக தடகள போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற பள்ளியின் முன்னாள் மாணவர் ஆனந்தன் குணசேகரன் பற்றி உடற்கல்வி இயக்குனர் அறிவழகன் அறிமுக உரையாற்றினார். இந்த விழாவில் பதக்கம் வென்ற ஆனந்த குமாருக்கு பள்ளியின் பழைய மாணவர் சங்கம் சார்பில் பழைய மாணவர் சங்க தலைவர் கல்யாணசுந்தரம் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் ஆசிரியர் அலுவலர் சங்கத்தின் செயலர் மனோகரன் வாழ்த்துரை வழங்கினார். விழாவின் சிறப்பு விருந்தினரும், பள்ளியின் முன்னாள் மாணவரும் உலக தடகள போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற ஆனந்தன் குணசேகரன் ஏற்புரை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார். முன்னதாக கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவிலில் இருந்து விழா நடைபெறும் கும்பகோணம் மேலக்காவேரி பள்ளி மைதானம் வரை தங்கம் பதக்கம் வென்ற ஆனந்தன் குணசேகரனுக்கு உற்சாக  வரவேற்பு கொடுக்கப்பட்டு ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக அவர் அழைத்து வரப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து