Idhayam Matrimony

மகன் ஓட்டிய கார் தாயின் உயிரை பறித்தது

புதன்கிழமை, 6 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

துபாய் : காரை நிறுத்த பிரேக்கை அழுத்துவதற்கு பதில் தவறுதலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால் மகன் ஓட்டிய கார் தாயின் உயிரை பறித்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜாவில் உள்ள முவைலா நகரில் வசிந்து வந்த இந்திய பெண் அல் காசிமி. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இவருக்கு திருமணமாகி 5 குழந்தைகள் உள்ளனர். 17 வயதான இவரது மூத்த மகன் அங்கு பிளஸ் 2 படித்து வருகிறான். ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான வயது தகுதியை இன்னும் அடையாத நிலையில் அந்த சிறுவன் ஷார்ஜாவில் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தான். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த சிறுவன் தனது தாயை அழைத்து வருவதற்காக அருகில் உள்ள பூங்காவுக்கு காரில் சென்றான். அப்போது சிறுவன் காரை நிறுத்துவதற்கு பிரேக்கை அழுத்துவதற்கு பதில் தவறுதலாக  ஆக்சிலரேட்டரை அழுத்தி விட்டான். இதனால் பூங்காவுக்கு வெளியே அமர்ந்திருந்த சிறுவனின் தாய் அல் காசிமி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் அவர் மகனின் கண் முன்னே சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதே போல் துபாயின் ஜெபல் அலி நகரில் ஆப்பிரிக்காவை சேர்ந்த வாலிபர் தனது காரை பின்னோக்கி இயக்கிய போது காருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த இந்திய பெண்ணும், அவரது 4 வயது பெண் குழந்தையும் சக்கரத்தில் சிக்கினர். இதில் அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. குழந்தையின் தாய் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து