எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லியில் தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி, கோர்ட்டுகளை புறக்கணித்து வக்கீல்கள் 3-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
டெல்லியில் திஸ்ஹசாரி கோர்ட்டு வளாகத்தில் கடந்த 2-ந்தேதி போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் விசுவரூபம் எடுத்து வருகிறது.
சாகெட் கோர்ட்டுக்கு வெளியே சீருடையில் இருந்த ஒரு போலீஸ்காரரை வக்கீல்கள் தாக்கிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் துரிதமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, போலீஸ்காரரை தாக்கிய வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மிக அபூர்வ நிகழ்வாக டெல்லி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் போராட்டம் நடத்தினர். 10 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த போராட்டம், உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் முடிவுக்கு வந்தது.
இதன் இடையே 2-ந்தேதி நடந்த மோதலின்போது வக்கீல்கள்மீது தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வக்கீல்கள் நடத்தும் போராட்டம் 3-வது நாளை எட்டியது. டெல்லியில் உள்ள 6 மாவட்ட கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் பணிக்கு செல்லாமல் கோர்ட்டுகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


