முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அ.தி.மு.க. பொதுக்குழு செயற்குழு 24-ல் கூடுகிறது - ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். அறிவிப்பு

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 24-ம் தேதி வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறுகிறது.

வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் என்று உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மாநிலத் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது, இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அ.தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கட்சியின் தலைமைக்கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று அ.தி.மு.க.வினருக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேச்சுவார்த்தைகளை தற்போதே தொடங்கி விட்டன. அதே போல் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளும் தங்களது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளன. இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 24-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10-30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறுகிறது. இதற்காக அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வரும், துணை முதல்வரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து