எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர் : காஷ்மீரில் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்ட ரெயில் சேவை 3 மாதங்களுக்கு பிறகு நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இதையடுத்து காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பாதுகாப்பு கருதி காஷ்மீரில் ஆகஸ்டு 3-ந்தேதி முதல் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
சில இடங்களில் நிலைமை சீரானதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனாலும் பல இடங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருந்து வந்தது. தற்போது காஷ்மீரில் இயல்பு நிலை மெல்லமெல்ல திரும்பியதையடுத்து செல்போன் சேவை அளிக்கப்பட்டது. இதேபோல் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில் காஷ்மீரில் நேற்று முதல் ரெயில் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி காஷ்மீரில் நேற்று ரெயில் சேவை தொடங்கப்பட்டது. ஸ்ரீநகர் - பாரமுல்லா- ஸ்ரீநகர் இடையே ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, ரெயில்வே போலீசார் உறுதி அளித்ததன் பேரில் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. காலை 10 மணி, மாலை 3 மணிக்கு ரெயில்கள் இயக்கப்படும் என்றனர். ஜம்மு பகுதியில் உள்ள பனிஹால்-ஸ்ரீநகர் வழித்தடத்தில் வருகிற 16-ந்தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு 17-ந்தேதி ரெயில் சேவை தொடங்குகிறது.
காஷ்மீரில் 3 மாதங்களுக்கு பிறகு ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


