வெளிநாடு சிகிச்சைக்கு செல்வதற்கான நிபந்தனைகளை ஏற்க ஷெரீப் மறுப்பு

புதன்கிழமை, 13 நவம்பர் 2019      உலகம்
Nawaz Sharif 2019 10 26

வெளிநாடு சிகிச்சை செல்ல விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்க நவாஸ் ஷெரீப் மறுப்பு தெரிவித்துள்ளார்.

‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, மருத்துவ சிகிச்சைக்காக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

கவலைக்கிடமான நிலையில் 2 வாரங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின்னர் அவரது உடல்நலம் சற்று தேறியதும், லாகூரின் ஜதி உம்ராவில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பினார். அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள அனைத்து மருத்துவ வசதிகளையும் பயன்படுத்தி நவாஸ் ஷெரீப்புக்கு சிகிச்சை அளித்துப் பார்த்துவிட்டதாகவும், அவரது உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பதுதான் ஒரே வழி என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, வெளிநாடு செல்ல நவாஸ் ஷெரீப் தரப்பில் பாகிஸ்தான் அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதனை பரிசீலித்த பாகிஸ்தான் அரசு அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது.

ஆனால், ரூ.700 கோடிக்கு சொந்த பிணைத்தொகை வழங்கவேண்டும் என்றும் உடல் நிலை தேறியதும் பாகிஸ்தான் திரும்பி ஊழல் வழக்கை எதிர்கொள்வேன் என்று உத்தரவாதம் அளித்து கையெழுத்திட வேண்டும் என்றும் இம்ரான்கான் அரசு கடும் நிபந்தனைகளை விதித்தது. ஆனால், இந்த நிபந்தனைகளை ஏற்க நவாஸ் ஷெரீப் மறுப்பு தெரிவித்துள்ளார். தனக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் சட்ட விரோதமானது என்றும் உடல் நிலையை அரசியலாக்கும் செயல் இது எனவும் நவாஸ் ஷெரீப் விமர்சித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து