முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் மின்னல் தாக்கி 20 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

பாகிஸ்தானில் கடுமையான மழை பெய்து வருவதை அடுத்து ஊரகப் பகுதிகளில் மின்னல் தாக்கி 20 பேர் பலியானதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் நடந்த இந்த உயிரிழப்புகள் குறித்து டான் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளதாவது:

பாகிஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதிகளில் புதனன்று பரவலான மழை பெய்யத் தொடங்கியது. தார்பர்கர் மாவட்டத்தில் மிதி, சாச்சி மற்றும் ராம் சிங் சோடோ கிராமங்களில் பெய்த கடும் மழையின்போது மின்னல் தாக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன.பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட மின்னல் தாக்குதல்களிலும், அதைத் தொடர்ந்த தீ விபத்திலும் நூற்றுக்கணக்கான விலங்குகள் அழிந்து விட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன. புதன்கிழமை இரவு மூன்று பேர் பலியான நிலையில், நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு பெய்த கடும் மழையில் மின்னல் தாக்கி 10 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். மின்னல் தாக்குதலில் 30 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மிதி, இஸ்லாம்கோட் மற்றும் சாக்ரோ நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு டான் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து