தங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2019      வர்த்தகம்
gold 2019 01 30

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.112 குறைந்து பவுன் ரூ.29,192-க்கு விற்பனையானது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு குறைந்து ரூ.48-க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. அக்டோபர் மாதத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து 29 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. நவம்பர் மாதம் தொடங்கியது முதலே தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக உள்ளது. சென்னையில் நேற்று (நவம்பர் 15) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) 14 ரூபாய் குறைந்து 3,649 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  அதே 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 29,192 ரூபாயாக விற்பனையானது. நேற்று சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி வரலாற்றில் ரூ. 29 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை 3 மாதங்களுக்கு பிறகு அதற்கு கீழே இறங்கியது. எனினும் நேற்று மீண்டும் தங்கம் விலை 29 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் நேற்று வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.48 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.48,000 ஆக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து