எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : இலங்கையின் 7-வது அதிபராக பதவியேற்கவுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இலங்கை அதிபர் தேர்தலில் இவ்வளவு பேர் போட்டியிட்டது இதுவே முதல் முறை. ஆனால், தற்போது பதவியில் உள்ள இலங்கை அதிபரோ, பிரதமரோ அல்லது எதிர்கட்சி தலைவரோ யாரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியான கோத்தபய ராஜபக்சே(70), அந்த நாட்டின் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 81.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 355 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில் கோத்தபய ராஜபக்ச முன்னிலை வகித்து வந்தார். அதன்படி, இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய கட்சி 50.55 சதவீதம் ( 56 லட்சத்து 95 ஆயிரத்து 45 ) ஓட்டுகளும், புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளரான சஜித் பிரேமதாச 43.49 சதவீதம் ( 46 லட்சத்து 82 ஆயிரத்து 726 ) ஓட்டுகளும் பெற்றனர். இதன்படி, கோத்தபயா ராஜபக்சே இலங்கையின் 7-வது அதிபராக பொறுப்பேற்கவுள்ளார்.
இதற்கிடையே தேர்தலில் தோல்வியை சந்தித்த சஜித் பிரேமதாச இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் பதிவியையும் சஜித் பிரேமதாச ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், இரு நாடுகளுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், எங்கள் பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும், அதிபர் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்காக இலங்கை மக்களையும் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


