லட்டு விலையை உயர்த்த மாட்டோம் - திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019      ஆன்மிகம்
tirupathi laddu 2019 08 03

திருப்பதி : aதிருப்பதியில் சலுகை விலை மற்றும் இலவச லட்டு நடைமுறை ரத்து செய்யப்பட்டு, தரிசனம் முடித்து வருபவர்களுக்கு ஒரு லட்டு மட்டும் இலவசமாகவும், கூடுதலாக வாங்கும் ஒரு லட்டுக்கு ரூ. 50-க்கும் விற்கப்பட இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இதற்கு தேவஸ்தான குழு தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,  லட்டு விலை உயர்வது குறித்து வெளியான தகவல்கள் வதந்தியே. விலை உயர்த்த கருத்துகள் பெறப்பட்டது, ஆனால் தேவஸ்தான நிர்வாகம் அதை பரிசீலிக்கவில்லை என தெரிவித்தார். மேலும், லட்டு விநியோகத்தில் முந்தைய நடைமுறையே தொடரும் எனவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து