எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஸ்ரீஹரிகோட்டா : கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதற்கான சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் எல்விஎம் -3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் நேற்று (நவ. 2) மாலை பாய்ந்தது. கடந்த 2013-ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் நிறைவடைய உள்ளதால், இதற்கு மாற்றாக சுமாா் ரூ.1,600 கோடியில் அதிநவீன சி.எம்.எஸ்.-03 (ஜிசாட்-7ஆா்) செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது.
சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோள் 4,400 கிலோ கிலோ எடை கொண்டதால், புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்களில் அதிக எடையுடையதாக சி.எம்.எஸ்.-03 உள்ளது. இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் அதிக எடை உடையதால், இந்த செயற்கைக்கோள் சுமந்து செல்லும் ராக்கெட், பாகுபலி ராக்கெட் எனப்படுகிறது.
இந்திய பாதுகாப்புத்துறையின் கண்காணிப்பு பணிகளுக்காக இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது.இந்திய கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதுடன், போா்க் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையே தொலைத்தொடா்பு சேவையை மேம்படுத்தவும் சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோள் உதவும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


