முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக தமிழக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் கருத்துகள்

ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2025      தமிழகம்
CM-2 2025-11-02

Source: provided

சென்னை : தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வழக்கு தொடர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

முதல்வர் தலைமையில்...

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தே.மு.தி.க., வி.சி.க., சி.பி.எம்., சி.பி.ஐ., திராவிடர் கழகம், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. பா.ம.க, நா.த.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்துள்ளன.

திராவிடக் கழகம்.... 

இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி பேசுகையில், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் செய்ய அரசியலமைப்பு சட்டப்படி அதிகாரம் இல்லை. எஸ்ஐஆரில் ஆபத்தான விஷயங்கள் உள்ளது. இதன்படி பூத் லெவல் அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்க சட்ட சம்மதம் கிடையாது. முதல்வர் கூட்டியுள்ள இந்த அனைத்துக் கட்சி கூட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது. சுப்ரீம் கோர்ட், உயர் நீதிமன்றத்தில் எஸ்ஐஆரில் உள்ள அம்சங்கள் குறித்து வழக்கு தொடர வேண்டும்” என்றார்

தமிழக காங்கிரஸ்...

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், “ எஸ்.ஐ.ஆர். பணிக்காக குடியுரிமை சான்றிதழ் கேட்டால் யாராலும் கொடுக்க முடியாது. நவம்பர் 4 முதல் ஒரு மாதத்தில் எஸ்.ஐ.ஆர். பணியை முடிக்க சொல்லியுள்ளனர், இது பருவமழை காலம். எப்படி அலுவலர்களால் இதனை செய்யமுடியும். தேர்தல் ஆணையம் செய்வது மோசடியான நடவடிக்கை. தமிழகத்தில் நேரடியாக வெற்றிபெற முடியாது என்பதால், குறுக்கு வழியில் வெற்றிபெற முயற்சி செய்கிறது” என்றார்.

வி.சி.க. தலைவர்...

விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “ இது வாக்குரிமையை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் அல்ல; குடியுரிமையை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல். குடியுரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரத்தையே அவர்கள் கேட்கிறார்கள். 2002ம் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் அதனை பொருத்திப் பார்க்க வேண்டும் என்கிறார்கள். மறைமுகமாக தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி என்ஆர்சி எனும் குடியுரிமை பதிவேட்டை உருவாக்கவே இந்த வேலையை செய்கிறார்கள்.

ம.தி.மு.க. வைகோ...

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், “ ஆட்சி பொறுப்பில் இருந்த கட்சியும், இன்னும் சில கட்சிகளும் இந்த கூட்டத்தை புறக்கணித்திருப்பது வருத்தத்துக்கு உரியது. பீகாரில் எஸ்.ஐ.ஆர். பணி நடந்தபோது அம்மாநிலத்தை சேர்ந்த 6.5 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. அவர்களின் பெயரை தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்றும், சென்னையில் மட்டும் பீகாரை சேர்ந்தவர்கள் 3.5 லட்சம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணி நடந்தால் வெளிமாநிலத்தை சேர்ந்த 75 லட்சம் பேர் இங்கே வாக்காளர்களாகும் அபாயம் உருவாகலாம். தமிழகத்தை குறிவைக்கும் பா.ஜ.க. இத்தகையை நடவடிக்கையை ஏற்க முடியாது என்றார். சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், “ வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எப்படி மக்களின் உரிமைகளை பறிக்கிறது என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

கமல்ஹாசன்... 

மநீம தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், “ மக்களாட்சியின் அடித்தளமே வாக்குரிமைதான். தகுதியுள்ள ஒருவரின் பெயர் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக் கூடாது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் ஏன் இவ்வளவு அவசரமாக செய்யப்படுகிறது. இந்த அவசரத்தினால் 65 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, அவர்கள் வாக்குரிமையை இழந்துள்ளனர்.என்றார். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் மட்டும் எஸ்.ஐ.ஆர். பணியை மேற்கொள்வதற்கு வேறு உள்நோக்கம் உள்ளதா?. தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது. இந்த பணியை நிதானமாக 2026 தேர்தலுக்குப் பின்னர் நடத்த வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து