டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரை இறுதியுடன் பெடரர் வெளியேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019      விளையாட்டு
Federer semi 2019 11 17

லண்டன் : டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் அரை இறுதியுடன் ரோஜர் பெடரர் வெளியேறினார்.

ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 6 முறை சாம்பியனான ரோஜர் பெடரருக்கு (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் ஒரு மணி 36 நிமிடங்கள் நடந்தது. முன்னதாக அகாசி பிரிவில் நடந்த கடைசி லீக்கில் நடப்பு சாம்பியனான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-4, 7-6 (4) என்ற செட் கணக்கில் டேனில் மெட்விடேவை (ரஷியா) வீழ்த்தினார். இந்த பிரிவில் ரபெல் நடால் (ஸ்பெயின்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தலா 2 வெற்றி பெற்று சமநிலை வகித்த போதிலும் செட் அடிப்படையில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அரைஇறுதி வாய்ப்பை தட்டிச் சென்றார். நடால் ஆண்டின் இறுதிவரை நம்பர் ஒன் என்ற திருப்தியுடன் வெளியேறினார்.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து