Idhayam Matrimony

ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை எதிர்க்கும் மேலிடத்து நபர்கள் யார்? பிரியங்கா காந்தி கேள்வி

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : உத்தரபிரதேச அரசில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை எதிர்க்கும் மேலிடத்து நபர்கள் யார் என பிரியங்கா கேள்வி எழுப்பி உள்ளார். 

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இந்த வழக்கை பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டரை போனில் அழைத்த மாநில மந்திரி சுவாதி சிங், அந்த வழக்கை திரும்ப பெறுமாறு மிரட்டியுள்ளார். இது ஒரு மேலிடத்து வழக்கு எனவும், இது குறித்து முதல்-மந்திரிக்கும் தெரியும் என்றும் அவர் இன்ஸ்பெக்டரிடம் கூறினார்.

இந்த ஆடியோ பதிவு மாநிலம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த விவகாரத்தில் சமாஜ்வாடி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் மாநில அரசு மீது குற்றச்சாட்டை தெரிவித்து வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச அரசுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும், இது மேலிடத்து உத்தரவு எனவும் உத்தரபிரதேச பா.ஜனதா அரசை சேர்ந்த மந்திரி ஒருவர் கூறுகிறார். ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை விரும்பாத இந்த ‘மேலிடத்து’ நபர்கள் யார்? யார்? மாநிலத்தில் ஏராளமான ஊழல் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த முறைகேடு தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து