Idhayam Matrimony

மேலடுக்கு சுழற்சி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. ஆனால் சென்னை நகரில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. வங்கக் கடலில் புயல் சின்னத்தால் சென்னையில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் புயல் திசை மாறி சென்றதால் சென்னையில் மழை பெய்யவில்லை. சில நாட்கள் மட்டும் ஓரளவுக்கு மழை பெய்தது. இதுவரை சென்னையில் வடகிழக்கு மழை 41 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் சென்னையில் 29 செ.மீட்டர் மழை பெய்து உள்ளது. இந்த நிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.  சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கடலூரில் 6 செ.மீ, திருச்செந்தூர் 5 செ.மீ, ஆலங்குடி 4 செ.மீ, வேதாரண்யம், அம்பாசமுத்திரம் தலா 3 செ.மீ மழை பெய்துள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து