Idhayam Matrimony

ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்கியது பா.ஜ.க.தான் - தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா பெருமிதம்

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

ராஞ்சி : நக்சல்களின் பிடியில் இருந்த ஜார்க்கண்ட்டை மீட்டு தனி மாநிலமாக உருவாக்கிய பெருமை பா.ஜ.க.வையே சாரும் என அக்கட்சியின் தலைவர் அமித்ஷா பேசினார்.

81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகிறது. இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஆளும் பா.ஜ.க. கட்டணியில் ஜார்கண்ட் மாணவர் அமைப்பு, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஜார்க்கண்ட் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஐக்கிய ஜனதாதளம், மற்றொரு கூட்டணி கட்சியான ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பு, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்கண்ட் மாணவர் யூனியன் அமைப்புடன் சேர்ந்து ஆட்சியமைத்த நிலையில் இந்த தேர்தலில் அந்த கட்சி தனித்து போட்டியிடுவது பா.ஜ.க.வுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில தேர்தலையொட்டி பா.ஜ.க. தலைவர் அமித்ஷா நேற்று மணிகாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:

மிகவும் பின்தங்கிய பகுதியான ஜார்க்கண்டை தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் நீண்ட காலமாக போராடி வந்தனர். இதற்காக பலர் உயிர் இழந்துள்ளனர். பலர் தியாகம் செய்துள்ளனர். பிர்ஸா முண்டா காலத்தில் இருந்து நடந்த போராட்டத்திற்கு வெற்றி தேடி தந்தது பா.ஜ.க.தான். காங்கிரஸ் அதனை செய்ய முன்வரவில்லை. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தான் ஜார்க்கண்ட் மாநிலம் உருவானது. பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ரகுபர் தாஸ் ஆட்சிக்காலத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் மிகுந்த வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து