Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் டிரம்புடன் பாக். பிரதமர் இம்ரான்கான் தொலைபேசியில் பேச்சு

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

அமெரிக்க அதிபர் டிரம்பும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் பேசியுள்ளார்.  இந்த பேச்சின் போது,  ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை, காஷ்மீர் விவகாரம் உள்பட பிராந்திய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் விடுதலை செய்யப்பட்டது  மகிழ்ச்சி அளிப்பதாக, டிரம்பிடம் தெரிவித்த இம்ரான் கான், ஆப்கான் அமைதி பேச்சுவார்த்தை நடவடிக்கையில், இது நேர்மறையான முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்ததாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி உரையாடலின் போது, காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் குறித்தும் டிரம்பிடம் இம்ரான் கான் எடுத்துரைத்ததாகவும், காஷ்மீர் பிரச்சினையில் சுமூகமாக தீர்வு காண அமெரிக்க அதிபர், தனது முயற்சிகளை தொடர வேண்டும் என்றும் இம்ரான் கான் டிரம்பிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து