எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் செயல்பாடுகளை பார்த்து டோனி ஓய்வு குறித்து முடிவு செய்வார் என லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை (50 ஓவர்) தொடரில் இந்திய அணி அரை இறுதியில் தோற்று வெளியேறிய பிறகு முன்னாள் கேப்டன் டோனி 3 மாதங்கள் ஓய்வு எடுப்பதாக கூறி போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் அவர் ஓய்வு முடிவை எடுப்பாரா? என்ற கருத்து நிலவுகிறது.
இதற்கிடையே டோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுபற்றி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறும் போது, டோனி ஓய்வு விஷயத்தில் ஐ.பி.எல். போட்டி முடியும் வரை காத்து இருக்க வேண்டும். ஐ.பி.எல். போட்டிக்கு பிறகுதான் 20 ஓவர் அணியில் இடம் பெறும் சிறந்த வீரர்கள் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டோனி கூறும் போது, ஓய்வு குறித்து ஜனவரி மாதம் வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் என்று தெரிவித்தார். இந்த நிலையில் டோனி ஓய்வு குறித்து முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் கூறியதாவது:-
இளம் விக்கெட் கீப்பர்களான ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோர் செயல்பாடுகளை டோனி அடுத்த சில மாதங்களாக தீவிரமாக கண்காணிப்பார் என்று நம்புகிறேன். அவர்களது ஆட்டத்திறனை பார்த்து டோனி தனது முடிவை எடுக்கலாம். ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஆட்டத்தை பார்த்து டோனி பொறுமையுடன் காத்து இருப்பார் என்று கருதுகிறேன். ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு அவர் தனது முடிவை அறிவிப்பார். ஏனென்றால் டோனி ஐ.பி.எல். போட்டிக்காக தயாராகி கொண்டிருக்கிறார்.
இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எப்பொழுதெல்லாம் விளையாடுகிறாரோ அப்போதெல்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அதை மீண்டும் செய்வார் என்று நம்புகிறேன். இவ்வாறு லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


