எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டசபை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசின் மீது சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 169 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
இந்நிலையில், அம்மாநில சட்டசபை சபாநாயகர் பதவிக்கு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் நானா பட்டோலே வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பா.ஜ.க சார்பில் கிஷன் கத்தோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். சட்டசபையில் பாஜகவின் பலம் குறைவாக உள்ள நிலையில் நேற்று காலை கிஷன் கத்தோர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.
இதனையடுத்து, சட்டசபை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
புதிய சபாநாயகராக பொறுப்பேற்கும் நானா பட்டோலே(56) விதர்பா பகுதியில் உள்ள சக்கோலி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ.வாகவும் பன்டாரா-கோன்டியா பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


