எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஐ.எஸ்.எல். தொடரில் விளையாடும் சென்னையின் எப்.சி. அணி தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜான் கிரிகோரி விடுவிக்கப் பட்டுள்ளார்.
கடந்த 2017-18 சீசனில் சென்னை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கிரிகோரி (இங்கிலாந்து), முதல் தொடரிலேயே கோப்பையை வென்று முத்திரை பதித்தார். 2018-19 சீசனில் சென்னை அணி கடைசி இடம் பிடித்தாலும், நடப்பு தொடரிலும் அவரே பயிற்சியாளராக தொடர்ந்தார். தொடக்க லீக் ஆட்டங்களில் அணியால் பெரிதாக சாதிக்க முடியாததால், ராஜினாமா முடிவை அறிவித்தார் கிரிகோரி. ஆனால் அவரையே பயிற்சியாளராக தொடர அணி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு பலனும் இருந்தது.சென்னையில் நடந்த 5-வது போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பெற்ற அணி அடுத்த போட்டியில் 2-2 என் டிரா செய்தது.
இந்நிலையில், நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கிரிகோரியின் சேவைக்கு மனமார்ந்த நன்றி. எங்கள் அணி 2-வது முறையாக ஐ.எஸ்.எல். கோப்பையை வெல்லவும், ஏ.எப்.சி. கோப்பைக்கு தகுதி பெற்ற முதல் ஐ.எஸ்.எல். அணியாகவும் மாறக் காரணமாக இருந்தவர் அவர். அவர் எதிர்காலம் சிறப்பாக அமைய எங்கள் நிர்வாகம் சார்பாக வாழ்த்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


