Idhayam Matrimony

பிரான்ஸ் நாட்டில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற மீட்புப்படை வீரர்கள் மூவர் பலி

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

பாரிஸ் : பிரான்ஸ் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் பலியாகினர்.

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை மற்றும் புயல் விபத்துக்களின் காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ரேடார் செயலிழந்தால், கீழே விழுந்து நொறுங்கியதில் 3 மீட்புப்படை வீரர்கள் பலியாகினர். பிரான்சின் வார் பகுதியில் உள்ள லீ-லக்-எட்-லீ-கேனட் பகுதியை நோக்கி மீட்புப்படை ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது பவுச்செஸ்-டு-ரோன் பகுதியில் சென்றபோது ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு சாதனமான ரேடார் மற்றும் ரேடியோ ஆகியவை செயலிழந்தன. இதையடுத்து அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்றது. ஆனால் நள்ளிரவு 12.30 மணியளவில் ஹெலிகாப்டர் நொறுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் சென்ற மூன்று வீரர்களும் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து