முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் டாக்டரை எரித்து கொன்ற 4 பேரையும் தூக்கில் போட வேண்டும் - விஜிலாசத்யானந்த் எம்.பி. ஆவேசம்

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஐதராபாத் பெண் டாக்டரை வன்கொடுமை செய்து கொலை செய்த 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த் கோரியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே கால்நடை பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது. மக்களவையில் எதிர்கட்சிகள் சார்பில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. கேள்வி நேரத்திற்கு பிறகு இதற்கு அனுமதி அளிப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார்.
டெல்லி மேல்சபையில் இந்த விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடந்தது. அ.தி.மு.க. உறுப்பினர் விஜிலா சத்யானந்த் கூறியதாவது:-

இந்தியாவில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. ஐதராபாத் பெண் டாக்டரை வன்கொடுமை செய்து கொலை செய்த 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். டிசம்பர் 31-ந் தேதிக்குள் அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து