முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

69 அடியை எட்டியது வைகை அணை நீர்மட்டம் : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

Source: provided

தேனி : வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டி வருவதால் கரையோர மக்களுக்கு தொடர் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்திலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்தது. 71 அடி உயரமுள்ள வைகை அணையில் நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 68.77 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 2607 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  அணையில் இருந்து 2090 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 5573 மி. கனஅடியாக உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டும் போது அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும்.

இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் வைகை ஆற்றுப்பாதையில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மற்றும் தண்டோரா மூலமும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து