Idhayam Matrimony

மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது : சத்தீஸ்கரில் பிரதமர் மோடி பேச்சு

சனிக்கிழமை, 1 நவம்பர் 2025      இந்தியா
Modi 2024-06-10

Source: provided

ராய்ப்பூர் : மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் உதவிக்குச் செல்லும் நாடு இந்தியா என்று சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரின் நவ ராய்ப்பூரில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் தியான மையமான சாந்தி ஷிகார்-ஐ பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இன்று உலகில் எங்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டாலும், எங்கு ஒரு பேரழிவு ஏற்பட்டாலும் உதவி வழங்க ஒரு நம்பகமான கூட்டாளியாக இந்தியா உள்ளது. இந்தியா எப்போதும் உதவிக்கு முதலில் செல்கிறது. ஒவ்வொரு உயிரினத்திலும் கடவுளைக் காண்பவர்கள் நாம். நமது பாரம்பரியத்தில், உலகம் செழிக்கட்டும், அனைத்து உயிரினங்களிடையேயும் நல்லெண்ணம் மேலோங்கட்டும் என்ற பிரார்த்தனையுடன்தான் எந்த ஒரு மத நிகழ்வும் முடிவடைகிறது.

மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது. இந்தியாவை வளர்ச்சி பெற வைப்பதற்கான பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் இந்த பயணத்தில் பிரம்ம குமாரிகள் போன்ற அமைப்புகள் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன. நான் பல பத்தாண்டுகளாக உங்கள் அனைவருடனும் தொடர்பில் இருக்கிறேன். நான் இங்கு விருந்தினராக வரவில்லை. நான் உங்களில் ஒருவன்.

இன்றைய நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்று (நேற்று) சத்தீஸ்கர் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஜார்க்கண்ட், உத்தராகண்ட் மாநிலங்களும் இன்று (நேற்று) 25 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன. இந்த மாநில மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து