எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல என்று நடிகர் அஜித்குமார் முதல்முறையாக அந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அஜித் பேசியிருக்கிறார். இது தொடர்பாக அஜித் கூறியிருப்பதாவது:-
கரூர் கூட்ட நெரிசலை வைத்து தமிழ்நாட்டில் நிறைய நடந்து விட்டது, கரூர் சம்பவத்திற்கு விஜய் மட்டும் பொறுப்பு அல்ல, நாம் எல்லோருமே பொறுப்பு. ரசிகர்களின் அளவு கடந்த எல்லையற்ற அன்பு இதுபோன்ற நிகழ்வுகளை உருவாக்குகிறது. கூட்டத்தால் நாம் மிகவும் வெறித்தனமாகி விடுகிறோம். இது முழு சினிமா துறையையும் மோசமாக காட்டுகிறது. இந்த மீடியாவும் படங்களின் முதல் நாள் முதல் ஷோவை ரசிகர்கள் அது செய்தார்கள் இது செய்தார்கள் என பெரிதாக்கி காட்டுகிறது.
இது ரசிகர்கள் மனதை மாற்றுகிறது. அன்பு வையுங்கள் போதும். ரசிகர்கள் என் மீது பொழியும் அன்புக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன். ஆனால் அதே அன்பு காரணமாகத்தான் நான் குடும்பத்துடன் வெளியில் செல்வதில்லை. என் மகனை கூட நான் பள்ளிக்கு கொண்டு சென்று விட முடியாத நிலை இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


