முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர பிரதேசத்தில் சோகம்: கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலி

சனிக்கிழமை, 1 நவம்பர் 2025      இந்தியா
Andhra 2025-11-01

Source: provided

விசாகப்பட்டினம் : ஆந்திராவில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலியான சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. நெரிசலில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் காசிபுக்கா என்ற பகுதியில் வெங்கடேஸ்வரா சுவாமி என்ற கோவில் உள்ளது. ஏகாதசியை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொண்டுள்ளனர். அப்போது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பேர் பலியானார்கள். சிலர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். தகவல் அறிந்து மாநில வேளாண் மந்திரி கே. அச்சன் நாயுடு அந்த பகுதிக்கு சென்றுள்ளார். அவர் சம்பவம் பற்றி கோவில் நிர்வாகிகளிடம் விவரம் கேட்டறிந்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த விபத்து குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா வெங்கடேஸ்வரா கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு நிவாரணப் பணிகளைக் கண்காணிக்குமாறு உள்ளூர் அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் கேட்டுக் கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து