முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிநவீன சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன எல்.வி.எம்.–3 எம்5 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

சனிக்கிழமை, 1 நவம்பர் 2025      இந்தியா
ISRO 2023-07-13

திருப்பதி, கடலோர எல்லைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்–03 செயற்கைக்கோள் எல்.வி.எம்.-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை விண்ணில் பாய்கிறது. 

நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ சார்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்–7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்–03 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. 

இந்த செயற்கைக்கோள் சந்திரயான்–3 அனுப்பிய எல்.வி.எம்.-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுண்ட்டவுன் நேற்று மாலை தொடங்கியது. இந்த திட்டம் வெற்றி அடைய, திருப்பதி கோவிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர் இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:– கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதற்காக இன்று எல்.வி.எம். 3–எம்5 ராக்கெட் சிஎம்எஸ்–03 செயற்கைக்கோளை ஏவ இலக்கு வைத்துள்ளோம். சிஎம்எஸ்–03 ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள் 4,400 கிலோ கிலோ எடை கொண்டது. இதுவரை புவிவட்டப் பாதைக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் இதுவே அதிக எடை கொண்டதாகும். இதில் விரிவுபடுத்தப்பட்ட மல்டி பேண்ட் தொழில்நுட்ப வசதிகள் உள்பட பல்வேறு நவீன அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்திய கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதுடன், போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையே தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தவும் இது உதவும். செயற்கைக்கோள் ஏவுவதற்கு தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. இன்று மாலை 5.26 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து