முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யுவராஜ் சிங் பிறந்த நாள்: சேவாக் கூறிய வித்தியாசமான வாழ்த்து

வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிறந்த நாளுக்கு சேவாக் தனது வழக்கமான நகைச்சுவையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஆல்ரவுண்டருமான யுவராஜ் சிங் தனது 38-வது பிறந்த நாளை நேற்று  (வியாழக்கிழமை) கொண்டாடினார். இந்நிலையில் யுவராஜ் சிங்குக்கு அவரது ரசிகர்கள் மற்றும் பிற கிரிக்கெட் வீரர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் தனது வழக்கமான நகைச்சுவையில் யுவராஜ் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், “A B C D E F G H I J K L M N O P Q R S T W X Y Z.. நீங்கள் ஏராளமான ஒளிக்கற்றைகளைப் பார்க்கலாம். ஆனால் ’UV ’என்பது அரிதான கதிராகும். பிறந்த நாள் வாழ்த்துகள் யுவி என்று பதிவிட்டுள்ளார்.

2007-ம் ஆண்டு டி 20 போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் போர்டின்பந்தில் யுவராஜ் ஆறு பந்துகளில் விளாசிய ஆறு சிக்ஸர்களை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் ஸ்டுவர்ட் போர்டும் யுவராஜ் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், சச்சின் டெண்டுல்கர், லஷ்மன், கோலி, ரெய்னா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் யுவராஜ் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து