குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கேரள மாநில அரசு அமல்படுத்தாது - முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு

வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019      இந்தியா
Pinarayi 2019 04 10

திருவனந்தபுரம் :  குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கேரள அரசு அமல்படுத்தாது என்று முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல அமைப்புகள் குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் இருக்கும் இலங்கை தமிழ் அகதிகளின் நிலை என்ன ஆகும் என்று கேரளா முதல்வர் பினராய் விஜயன் கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியாவில் இருக்கும் எல்லா இந்தியர்களுக்கும் குடியுரிமையை அடிப்படை உரிமை என்று இந்திய சட்டம் கூறுகிறது. மதம், சாதி , மொழி , கலாச்சாரம், பாலினம் கடந்து இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதை உடைக்கும் அளவிற்கு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மத ரீதியாக மக்களை பிரிக்கும் வகையில், மத ரீதியாக குடியுரிமை வழங்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இது இந்திய இறையாண்மைக்கும், சட்டத்திற்கும் முழுக்க முழுக்க எதிரானது என கூறியுள்ளார். இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கேரள அரசு அமல்படுத்தாது என்று முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து