எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருப்புவனம் : காவலர்கள் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் விசாரணை நடத்தினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தனிப்படை போலீஸார் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கை நேற்று முன்தினம் உயர் நீதிமன்றம் மதுரை கிளை விசாரித்தது. அப்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் காவல்துறையினரிடமும், அரசிடமும் சரமாரியாக பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.
மேலும் இந்த வழக்கு குறித்து மதுரை மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்ய உத்தரவிட்டனர். இந்நிலையில் நேற்று திருப்புவனத்தில் மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தினார்.
அவர் திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் கோவில் உதவிஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் விசாரணை செய்தார். மேலும் தனிப்படை காவலர்கள் அஜித்குமாரை அழைத்துச் சென்று விசாரித்த இடங்களில் நீதிபதி ஆய்வு செய்ததாக தெரிகிறது. அஜித்குமாரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்த நீதிபதி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


