முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமில்லை : மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்

புதன்கிழமை, 2 ஜூலை 2025      இந்தியா
Vaccination 2024-04-16

Source: provided

புதுடெல்லி : கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோவிட் தொற்றுக்குப் பிறகு ஏற்படும் திடீர் மரணங்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் நடத்திய விரிவான ஆய்வுகளை மேற்கோள்காட்டி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “கோவிட்-க்குப் பிறகு ஏற்படும் திடீர் மரணங்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் எய்ம்ஸ் ஆகியவற்றின் விரிவான ஆய்வுகள், கோவிட் 19 தடுப்பூசிகளுக்கும், திடீர் மரணங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதியாக நிரூபித்துள்ளன. ஐ.சி.எம்.ஆர். மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் நடத்திய ஆய்வுகள், இந்தியாவில் உள்ள கோவிட்-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இவை மிகவும் அரிதாகவே கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரியவந்துள்ளது”என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், "மரபியல், வாழ்க்கை முறை, ஏற்கனவே உள்ள உடல்நல பாதிப்புகள் மற்றும் கோவிட்-க்குப் பிந்தைய சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் திடீர் மாரடைப்பு உயிரிழப்புகள் ஏற்படலாம். கோவிட் தடுப்பூசியை திடீர் மரணங்களுடன் இணைக்கும் கருத்துகள் தவறானவை. இவற்றுக்கான ஒருமித்த கருத்து கொண்ட ஆதாரங்கள் இல்லை என்பதை அறிவியல் நிபுணர்கள் மீண்டும் உறுதிசெய்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து