முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை : திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

புதன்கிழமை, 2 ஜூலை 2025      தமிழகம்
CM-1 2025-07-02

Source: provided

சென்னை : கேலி செய்பவர்களை குறித்து கவலையில்லை என்றும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சென்னையில் 32 ஏழை ஜோடிகளுக்கு நடந்த திருமண நிகழ்ச்சியில் 

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும், எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், அறநிலையத்துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 32 ஜோடிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார். 32 ஜோடிகளுக்கும் 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.

சென்னையில், அறநிலையத்துறை சார்பில் நேற்று 32 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:- தி.மு.க., ஆட்சியில் அறநிலையத்துறை சார்பில் 2,376 திருமணங்கள் நடைபெற்றுள்ளது; அதில் 150 திருமணங்கள் நானே நடத்தி வைத்துள்ளேன். 3,127 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தி உள்ளோம். தி.மு.க., ஆட்சியில் 12 ஆயிரம் கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது.

997 திருக்கோவில்களுக்கு சொந்தமான 7,650 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 6 ஆயிரம் கோடி மதிப்பில் 26 ஆயிரம் கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. 1,000 ஆண்டுகள் பழமையான திருக்கோவில்களை தொன்மை மாறாமல் புனரமைக்க ரூ.425 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. அடியார்க்கு அடியார்போல் அமைச்சர் சேகர்பாபு உழைத்து வருகிறார்; அமைச்சர் சேகர்பாபு செயல்பாபு மட்டுமின்றி புயல் பாபுவாகவும் மாறியுள்ளார்.

அறநிலையத்துறை சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 2,326 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. வெறுப்பையும் சமூகத்தில் பிளவுபடுத்தும் எண்ணங்களை கொண்டவர்களால் எங்களை பார்த்து தாங்கிக் கொள்ள முடியவில்லை. பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உண்மையான பக்தர்கள் திராவிட மாடல் அரசை பாராட்டுகின்றனர்.

பல ஆண்டுகால வன்மத்தால் என்னை விமர்சித்து கேலிசித்திரம் வெளியிடுகின்றனர். இதுபோன்ற அவதூறுகள்தான் எனக்கு ஊக்கம், உற்சாகம் அளிக்கின்றன. எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும். என்னுடைய பணி மக்கள் பணி அதை அறிந்து நான் செயல்படுவேன். இன்னும் எங்களை கேலி செய்யுங்கள், விமர்சனம் செய்யுங்கள், கொச்சைப்படுத்துங்கள், அதை பற்றி கவலைப்பட போவதில்லை. மணமக்கள் பிறக்க போகும் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் வையுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து