Idhayam Matrimony

புதிய வாரிசை அறிவிக்க தலாய் லாமா மறுப்பு? - தேர்ந்தெடுக்க அறக்கட்டளைக்கு அதிகாரம்

புதன்கிழமை, 2 ஜூலை 2025      உலகம்
Dalai-Lama-2023-12-14

Source: provided

கான்பெரா : தற்போதைய 14வது தலாய் லாமா, புதிய வாரிசை அறிவிக்க மறுத்துவிட்டார். புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க திபெத் அறக்கட்டளைக்கு அதிகாரம் அளித்தார்.

நம் அண்டை நாடான திபெத், 1959ம் ஆண்டு முதல், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. புத்த மத தலைவரான தலாய்லாமா தான் இந்த நாட்டின் ஆட்சியாளர். ஆனால் சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக, தற்போதைய தலாய் லாமா, சிறுவயதாக இருந்த போதே இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்து விட்டார்.

அவருடன் வந்த லட்சக்கணக்கான திபெத் மக்கள், இந்தியாவில் வசிக்கின்றனர். இவர்கள், திபெத் மீதான சீனாவின் ஆட்சியை ஏற்பதில்லை. தங்களுக்கென நாடு கடந்த திபெத் அரசாங்கத்தை அமைத்து நிர்வாகம் செய்து வருகின்றனர். தற்போது மத தலைவராக இருக்கும் தலாய்லாமா, 14வது தலாய்லாமா ஆவார்.

இவர் இந்த மாதம் வாரிசை அறிவிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று (ஜூலை 02) அவர் வாரிசை தேர்வு செய்ய மறுப்பு தெரிவித்தார். அவர் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க திபெத் அறக்கட்டளைக்கு அதிகாரம் அளித்தார். இது குறித்து தலாய் லாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதியே புதிய தலாய் லாமாவை அங்கீகரிப்பதற்கான நடைமுறை குறித்துத் தெளிவாக விளக்கி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புதிய தலாய் லாமாவை தேர்வு செய்யும் பொறுப்பு, தலாய் லாமாவின் அலுவலகமான கடென் போட்ராங் அறக்கட்டளையின் உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் திபெத்திய புத்த மரபுகளின் பல்வேறு தலைவர்களை சந்தித்து கலந்து ஆலோசிக்க வேண்டும். யாருக்கும் அதிகாரம் இல்லை எதிர்கால மறுபிறப்பை அங்கீகரிக்கும் முழு அதிகாரம் கடென் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது. இந்த விஷயத்தில் தலையிட வேறு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து