முகமது அசாருதீன் மகனுக்கும் சானியாமிர்சா சகோதரிக்கும் திருமணம்

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019      விளையாட்டு
saniya mirza sister marriage 2019 12 13

ஹைதராபாத் : இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவருமான முகமது அசாருதீன் மகனுக்கும், சானியா மிர்சா சகோதரிக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீனின் மகனான முகமது அசாத்துக்கும், ஆடை வடிவமைப்பாளரான சனம் மிர்சாவிற்கும் கடந்த புதன்கிழமை ஐதராபாத்தில் திருமணம் நடைபெற்றது.

அனம் மிர்சா இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சகோதரி ஆவார். சில மாதங்களாக அசாத் மற்றும் அனம் மிர்சா இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அனம் மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமையன்று ஐதராபாத்தில் வைத்து இந்த ஜோடிக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதையடுத்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து