Idhayam Matrimony

அமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது.  

அமெரிக்கா- சோவியத் ரஷியா இடையே பனிப்போர் காலத்தில் 1987-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும் தரையில் இருந்து ஏவப்படுகிற குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை சோதிக்க தடை விதித்தது. ரஷியா இந்த ஒப்பந்தத்தை மீறி, ஏவுகணைகளை சோதிப்பதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா கடந்த ஆகஸ்டு மாதம் ரஷியா உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. 

ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய சில நாட்களிலேயே தரையில் இருந்து ஏவப்படும் நடுத்தர தூர ஏவுகணை ஒன்றை அமெரிக்கா சோதித்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை “ராணுவ பதற்றத்தை அதிகரிக்கும் செயல்” என கூறி ரஷியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் தரையில் இருந்து ஏவப்படும் நடுத்தர தூர ஏவுகணையை அமெரிக்கா மீண்டும் சோதித்தது. கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வான்டென்பெர்க் விமானப்படை தளத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை 500 கி.மீ தொலைவுக்கு பறந்து, பின்னர் பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

மேலும், “சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் இந்த சோதனையில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் அமெரிக்க பாதுகாப்பு துறையின் எதிர்கால திறன்களை மேம்படுத்தும்” என பென்டகன் செய்தி தொடர்பாளர் ராபர்ட் கார்வெர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து