Idhayam Matrimony

வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்துக்கு மேலாக, மாநிலம் முழுவதும் மழை நின்று, வறண்ட வானிலை நிலவுகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல சுழற்சி காரமணாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலையாக 30 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்ப நிலையாக 21 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் ஒரு செ.மீ மழை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 1-ம் தேதி முதல் நேற்று (17.01.2020) வரையிலான காலகட்டத்தில் சென்னையில் 34.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழையின் அளவு 16.8 மி.மீ. ஆகும். அதன்படி, தற்போதைய மழையின் அளவு வழக்கத்தை 103 சதவீதம் அதிகமாகும். ஆனால், சென்னையை தவிர மற்ற பகுதிகளில் இயல்பான மழை அளவை விட குறைவான மழையே பதிவாகியுள்ளது. அதிலும், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளில் இந்த காலகட்டத்தில் மழை பதிவாகவே இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து