தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக குயின்டான் டி காக் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2020      விளையாட்டு
Quinton de Kock 2020 01 21

தென் ஆப்பிரிக்கா : தென்ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் குயின்டான் டி காக் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4-வது மற்றும் கடைசி போட்டி வருகிற 24-ம் தேதி தொடங்குகிறது. அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 4-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து புது வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். குயின்டான் டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அப்போது டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 27 வயதாகும் குயின்டான் டி காக் இதுவரை 115 ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி 14 சதங்கள், 24 அரைசதங்களுடன் 4907 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 178 ரன்கள் அடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து