Idhayam Matrimony

தொழில்துறையில் ஈட்ட முதலீடுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 17 அக்டோபர் 2025      தமிழகம்
EPS 2023 03 27

Source: provided

சென்னை : தொழில்துறையில் ஈட்ட முதலீடுகள் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று தெரிவித்த அ.தி.மு.க. பொதுச் செயலளார் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் அலட்சியம் காரணமாக தான் இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தி.மு.க. ஆட்சியில் உருட்டுக் கடை அல்வாதான் கிடைக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. பொதுச் செயலளார் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது: இருமல் மருந்து குடித்து, 25 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசு அலட்சியமாக இருந்ததால் உயிரிழப்புகள் நடந்துள்ளது. காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை குடித்து 25 பேர் உயிரிழந்துள்ளனர். இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக சட்டப் பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தோம்.

மருந்து நிறுவனத்தில் நடந்த சோதனையில் முறைகேடு கண்டறியப்பட்டு ஏற்கெனவே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டும், 2024 மற்றும் 2025ல் தமிழக அரசு சோதனை செய்யவில்லை. மருந்து உற்பத்தியை சரிவர கண்காணிக்காததால் தான் இறப்பு நேர்ந்துள்ளது.

சிறுநீரக முறைகேடு புகாரில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அமைச்சர் ஏதேதோ சொல்லி மழுப்பி முடித்துவிடுகிறார். தி.மு.க. அரசாங்கத்தில் உருட்டுக் கடை அல்வாதான் கிடைக்கும். 2021-ம் ஆண்டில் தீபாவளியின்போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். அதில் 10% அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. இப்போது அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார். விவசாயிகளுக்கு துரோகம் செய்யக்கூடிய அரசாக தி.மு.க. உள்ளது. தொழில்துறையில் ஈட்ட முதலீடுகள் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும். தி.மு.க.வில் எல்லாமே வெற்று அறிவிப்பு தான்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து